ரூட்டை மாற்றிய மிக்ஜாம் புயல்... சென்னை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன வானிலை ஆர்வலர்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கிய நிலையில், அது எப்போது குறையும் என்கிற அப்டேட்டை வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

cyclone Michaung moving towards nellore rains slow down in chennai gan

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவில் பெய்த அதிகனமழையால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மிக்ஜாம் புயலில் சிக்கி சேதமடைந்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அமைச்சர்கள் அனைவரும் களத்தில் நேரடியாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அது எப்போது குறையும் என்கிற அப்டேட்டை வானிலை ஆர்வலர் ராஜா ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவில், சென்னையின் மையப் பகுதியில் மழைப்பொழிவு வலுவிழந்து வருவதாகவும் மழை படிப்படியாக குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்குள் மழை குறையும் எனவும் புயல் நமது கடற்கரைக்கு அருகில் இருப்பதனால் சில நேரங்களில் பலத்த காற்று வீசும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புயல் தற்போது படிப்படியாக நெல்லூரை நோக்கி நகர்ந்து வருவதால், அது முழுமையாக கரையைக் கடக்கும் வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதி தீவிர மழையானது இனி வராது என்கிற குட் நியூஸையும் கூறி இருக்கிறார். இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி... பார்க்கிங் ஏரியாவாக மாறிய பாலம் - படையெடுத்து நிற்கும் கார்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios