சின்னச் சின்ன மழைத்துளிகள்! சென்னையின் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில்லென்ற வானிலை!
சென்னையில் மாநகர் பகுதியிலும் புறநகர் பகுதியிலும் இரவு 7.30 மணி முதல் பரவலாக மழை பெய்துவருகிறது.
சென்னையில் மாநகர் பகுதியிலும் புறநகர் பகுதியிலும் சனிக்கிழமை மாலைக்குப் பின் பரவலான மழைப்பொழிவு காணப்படுகிறது. இரவு 7.30 மணி முதல் ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வட பழனி, கிண்டி ஆகிய இடங்களில் நல்ல மழை பொழிகிறது. அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது.
வெதர்மேன் சமத் கூறுகையில், "சென்னையில் சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்கிறது!! சென்னையில் ஒரு தீவிர புயல் வடக்கு மற்றும் மைய சென்னையின் சில பகுதிகளில் குறுகிய தீவிர மழையை கொடுக்கலாம்!!" என்று தெரிவித்தள்ளார்.
அப்பா சொன்ன வார்த்தை உண்மைதான்! லடாக்கில் பைக் ஓட்டி மகிழ்ந்த ராகுல் காந்தி நெகிழ்ச்சி!
"கடந்த 20-30 நிமிடங்களுக்கு மேலாக தீவிர மழை பொழிந்துவருகிறது. அடுத்த 10 நாட்கள் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என மற்றொரு தன்னார்வ வானிலை ஆர்வலர் கணிக்கிறார். இந்நிலையில் சென்னை மழைப்பொழிவு குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் அப்டேட் கொடுத்து வருகின்றனர்.
"வடசென்னை மற்றும் மையப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடசென்னையின் புறநகர்ப் பகுதிகளான ரெட்ஹில்ஸ், சோழவரம், மணலி இப்போது நல்ல மழை பெய்து வருகிறது" என ஒருவர் கூறியுள்ளார். "தற்போது அண்ணா நகரில் காற்றுடன் கூடிய மழை" என மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் தலைவர் அலப்பறை! முதல்வர், ஆளுநருடன் சந்திப்பு... நாளை அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு!