மக்களே சென்னையில் இன்று இந்தெந்த பகுதிகளில் மின்தடை.. 5 மணி நேரம் வரை கரண்ட் இருக்காது..!
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புக் காரணமாக மாதம் ஒருமுறை மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் 2 ம் தேதி சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;- தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புக் காரணமாக மாதம் ஒருமுறை மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் 2 ம் தேதியான இன்று சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னப்போ சிரிச்சாங்கலே.. இதோ பார் அணில்.. வெளியானது ஆதாரம்.
போரூர் : செம்பரம்பாக்கம், நசரத்பேட் பகுதி, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களூர் ட்ரங்க் சாலை, செம்பரம்பாக்கம், திருமழிசை, மலையம்பாக்கம், அகரமேல் ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்பட உள்ளது. மேற்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க;- இன்று சென்னையில் இந்தந்த பகுதிகளில் மின்தடை! மக்களே மதியம் 2 மணி வரை கரண்ட் இருக்காது!
அதேபோல், மதுரை வடக்கு பெருநகர் கோட்ட ஐடி பார்க் இலந்தை குளம் துணை மின்நிலையத்தில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்:- இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், ஆம்பளகாரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ராம்நகர், பி.கே.பி.நகர், ஆதிஸ்வரன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பெருநகர் வடக்கு மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.