பெண் உயிரிழந்த விவகாரம்; கட்டிடம் இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்த உத்தரவு
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கட்டிடம் இடிக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் உயிரிழந்த நிலையில், பணியை உடனடியாக நிறுத்துமாறு கட்டிட உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு மசூதி அருகே நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று காலை கட்டிடத்தின் சுற்றுச் சுவரை இடிக்கும் போது அவ்வழியாக வந்த பாதசாரிகள் மீது சுவர் இடிந்து விழுந்தது.
வேலூரில் உணவு டெலிவரி ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல்; ஒருவர் கைது
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேனியைச் சேர்ந்த பிரியா என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததே இந்த விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கிய புதுமண தம்பதி
இந்த விவகாரத்தில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டிடம் இடிப்பதற்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா, சரியான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தான் கட்டிடம் இடிக்கப்படுகின்றதா என்று சென்னை மாநகராட்சி விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.