Asianet News TamilAsianet News Tamil

திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கிய புதுமண தம்பதி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்குச் நேரில் சென்று வளர்ச்சி பணிகளுக்காக ரூபாய் 10 ஆயிரம் நிதி உதவி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய புதுமணக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

newly married couple donates rs 10000 for government school development in ariyalur
Author
First Published Jan 27, 2023, 3:22 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவிந்தபுத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் முத்தையன், ராஜேஸ்வரி தம்பதி. முத்தையன் அரசு டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது மகன் மணிகண்டன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் திருமணம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு கோவிந்தபுத்தூர் கிராமத்தில் உள்ள கங்காஜடேஸ்வரர் கோவிலில் இன்று ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. 

ஈரோடு கிழக்கு தொகுதி அமமுக வேட்பாளராக மாவட்ட செயலாளர் சிபிரசாத் அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு தன்னுடைய சேமிப்பு பணத்தை தாம் படித்த அரசு பள்ளிக்கு கல்வி வளர்ச்சி பணிகளுக்காக நிதி அளிப்பதற்கு மணிகண்டன் முன்வந்தார். இதனை தனது மனைவி பிரியங்காவிடம் தெரிவித்து, உடனடியாக திருமணம் முடிந்த கையோடு அருகில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதுமணத் தம்பதிகள் நேரில் சென்றனர்.

அப்போது அங்கிருந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ரூபாய் 10 ஆயிரத்திற்கான தொகையை மணிகண்டன், பிரியங்கா தம்பதியினர் அளித்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவிட்டு மண்டபத்திற்கு சென்றனர். 

சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிந்து பெண் பலி

இது தொடர்பாக புதுமணத் தம்பதிகள் தெரிவிக்கையில், அரசு பள்ளியில் தான் நான் கல்வி பயின்றேன் இந்த பள்ளிக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கல்வி வளர்ச்சி பணிகளுக்காக ரூபாய் 10 ஆயிரம் நிதி உதவி அளித்துள்ளோம். 

இதற்கு முன்பு எனது தந்தை பள்ளிக்காக பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அந்த வகையில் பொதுமக்களிடத்தில் அரசு பள்ளியின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதனை நாங்கள் செய்துள்ளோம். இதன் மூலம் நாங்களும் எங்களது பெற்றோரும் மனதளவில் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என தெரிவித்தனர். புதுமணத் தம்பதிகளின் இந்த செயல் பார்த்த பலரும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios