சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிந்து பெண் பலி
சென்னை அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழையை கட்டிடத்தை இடிக்கும் போது அதன் சுற்றுச்சுவர் விழுந்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆயிரம்விளக்கு மசூதி அருகே பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை கட்டிடத்தை இடித்துக் கொண்டிருந்த போது அதன் சுற்றுச்சுவர் அவ்வழியாக வந்த பெண்கள் மீது இடிந்து விழுந்தது.
காதலியுடன் கருத்து வேறுபாடு; ரூ.70 லட்சம் பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த மருத்துவர்
கட்டிட சுற்றுச்சுவரின் இடிபாடுகளில் பெண்கள் சிக்கியதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை, மதுரையில் இருந்து பழனிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
இந்த விபத்தில் மதுரையைச் சேர்ந்த பிரியா என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கட்டிடம் இடிக்கப்பட்டதே விபத்து ஏற்பட காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் இடிபாடுகளின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.