சென்னை மாநகரப் பேருந்தில் ஓட்டை.. கீழே விழுந்த பெண் காயம்.. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு!
சென்னை வள்ளலார் நகரிலிருந்து திருவேற்காடு செல்லும் 59 தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்து ஒன்றில் நேற்று காலை ஏராளமான பயணிகள் சென்றுக்கொண்டிருந்தது.
சென்னை மாநகரப் பேருந்தின் பின்பக்க இருக்கை அருகே இருந்த பலகை உடைந்து பெண் பயணி காயமடைந்த விவகாரம் தொடர்பாக பணிமனையை சார்ந்த பணியாளர்கள், பொறுப்பாளர்கள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை வள்ளலார் நகரிலிருந்து திருவேற்காடு செல்லும் 59 தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்து ஒன்றில் நேற்று காலை ஏராளமான பயணிகள் சென்றுக்கொண்டிருந்தது. அந்த பேருந்து அமைந்தகரை அருகே வந்துக்கொண்டிருந்த போது கடைசி இருக்கையின் கீழ் உள்ள பலகை திடீரென உடைந்தது. இதனால் அங்கு அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர் அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார். இதனை கண்டு சக பயணிகளும் கத்தி அலறி சத்தம் போட்டதை அடுத்து பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர், ஓட்டையில் விழுந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலானது. இந்நிலையில், பணிமனையை சார்ந்த பணியாளர்கள், பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகளிர் இலவசப் பேருந்தில் திடீர் ஓட்டை; ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் பயணி காயம்
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மாநகர் போக்குவரத்துக் கழகம். பேசின் பாலம் பணிமனையை சார்ந்த பேருந்து (பேருந்து எண்.BBI0706. தடம் எண்.59/E) வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு நோக்கி செல்லும்போது, காலை 9.10 மணியளவில் SKYWALK என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக பேருந்தின் பின் இருக்கை அருகில் பொருத்தப்பட்டிருந்த பலகை உடைந்து விழுந்தது. அந்த இடத்தில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு.. சைதை துரைசாமி வேதனையுடன் அறிவிப்பு.!
இந்நிகழ்வு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, பேருந்தை பழுது பார்க்கும் பேசின் பாலம் பணிமனையை சார்ந்த பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது நிர்வாக ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம், அனைத்து பணிமனைகளிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.