சென்னையில் மீண்டும் விடிய விடிய மழை பெய்ய வாய்ப்பு! அலர்ட் செய்யும் வானிலை அறிவிப்பாளர்கள்!

சென்னையில் இன்றும் இரவு முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தன்னார்வ வானிலை அறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர்.

Chennai likely to get another active night of Rainfall

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது குறிப்பாக, வேளச்சேரி, கிண்டி, வேப்பேரி, ஜிஎஸ்டி சாலை, கேகே நகர், போரூர் மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த ஒரு வார காலமாக சென்னையில் மிக அதிக வெப்பநிலை உணரப்பட்ட நிலையில், இந்த மழை சென்னை மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த மழைப்பொழிவு நீடிக்கும் என்று கணித்துள்ள நிலையில், தன்னார்வ வானிலை அறிவிப்பாளர்கள் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் வடகிழக்குப் பகுதி சென்னைக்கு அருகே நகர்ந்துள்ளதால் மீண்டும் விடிய விடிய மழை கொட்ட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மொபைல் பயன்படுத்துவதைத் தடுத்த தாய்... பழி வாங்க திட்டம் போட்ட சிறுமியின் விபரீதச் செயல்!

இந்நிலையில், இரவு 11 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதனிடையே, அபாயகரமான சூழல் ஏதும் இல்லை என்றும் சென்னையில் வெள்ளம் வரும் என்று பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வெதர்மேன் சரண் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்கிறது. மேலும், செவ்வாய்க்கிழமை (20ஆம் தேதி) முதல் வரும் வெள்ளிக்கிழமை (23ஆம் தேதி) வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணித்துள்ளது.

8 ரயில்களில் 2ஆம் வகுப்பு பெட்டிகளைக் குறைத்து ஏசி பெட்டிகளை சேர்க்கும் தெற்கு ரயில்வே!

நாளை (செவ்வாய்க்கிழமை) வட மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யுக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளிலும் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்கிறது.

இதுவரை யாரும் செய்யாத சாதனை! ஒரே ஆர்டரில் 500 ஏர்பஸ் விமானங்களை வாங்கும் இண்டிகோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios