நாட்டின் மிகப்பெரிய விமானக் கொள்முதல் ஆர்டர் செய்த பெருமையை இண்டிகோ நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஆர்டர் கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலர் மதிப்புள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, திங்கட்கிழமை 500 ஏர்பஸ் A320 விமானங்களை வாங்குவதற்கான ஆர்டரை வழங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய விமானக் கொள்முதல் ஆர்டர் செய்த பெருமையையும் இண்டிகோ நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கு முன் அதிகபட்சமாக இருந்த ஏர் இந்தியாவின் 470 விமானங்களுக்கான ஆர்டரை முறியடித்துள்ளது.
இண்டிகோவின் இந்த ஆர்டர் கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலர் மதிப்புள்ளது என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இண்டிகோ நிறுவனம் பெற்றுள்ள நற்பெயரின் காரணமாக ஏர்பஸ் நிறுவனம் அதிக தள்ளுபடியுடன் விமானத்தை வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது என்ன கேலிக்கூத்து! கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருதா? காங். கண்டனம்... பாஜக பதிலடி!

இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் விமான நிறுவனமாகவும் இருக்கும் இண்டிகோ முந்தைய ஆர்டர்களில் கோரிய 480 விமானங்கள் இன்னும் அந்நிறுவனத்திடம் வழங்கப்படவில்லை. அவை 2030ஆம் ஆண்டுக்குள் கிடைத்துவிடும் என்றும் தெரிகிறது. புதிய ஆர்டர் மூலம் இண்டிகோ நிறுவனத்தில் 2030 முதல் 2035 வரையிலும் தொடர்ந்து விமானங்கள் டெலிவரி செய்யப்படும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரீஸ் ஏர் ஷோ 2023 நிகழ்ச்சியில் இண்டிகோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராகுல் பாட்டியா மற்றும் ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குய்லூம் ஃபாரி ஆகியோர் இடையே புதிய விமானங்களுக்கான இந்த மாபெரும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இண்டிகோ நிறுவனம் மொத்தம் 1,330 விமானங்களை ஏர்பஸ் நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளது. சந்தைப் பங்கின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமாக உள்ள இண்டிகோ, தற்போது கிட்டத்தட்ட 310 உள்நாட்டு விமானங்களை இயக்குகிறது.
8 ரயில்களில் 2ஆம் வகுப்பு பெட்டிகளைக் குறைத்து ஏசி பெட்டிகளை சேர்க்கும் தெற்கு ரயில்வே!

“அடுத்த பத்தாண்டுகளில் A320 neo, A321 neo மற்றும் A321XLR ரகங்களைச் சேர்ந்த இன்னும் 1,000 விமானங்கள் இண்டிகோவுக்குக் கிடைக்க உள்ளன” என விமான நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
மற்றொரு பெரிய விமான நிறுவனமான ஏர் இந்தியா பிப்ரவரியில் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடம் இருந்து முறையே 400 மற்றும் 70 விமானங்களை 70 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க ஆர்டர் செய்தது. இதில், A350s, Boeing 787s மற்றும் B777X ஆகிய விமான ரகங்கள் இருப்பதாவும் தகவல் வெளியானது.
RAW உளவு அமைப்பின் புதிய தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்ஹா நியமனம்!
