சென்னை ஐடிசி ஓட்டலை தொடர்ந்து எம்ஆர்சி நகரிலுள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வெகுவாக குறைந்து வருகிறது. தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், இங்கிலாந்து நாட்டில் இருந்து பரவும் உருமாறிய கொரோனா தமிழகத்தில் நுழையாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், முகக்கவசம், தனி மனித இடைவெளி, கைகளை கழுவுதல் போன்ற எச்சரிக்கைகள் மீறப்படும்போது கொரோனா தொற்று மீண்டும் பரவும் என எசச்ரிக்கை விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஐஐடி மாணவர்கள் மெஸ் ஊழியர்களுக்கு ஏற்பட்ட தொற்றுஏற்பட்டது. அதேப்போன்று கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் 619 பேருக்கு கொரோனா பரடிசோதனை செய்யப்பட்டதில்  நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், ஓட்டலில் பொது நிகழ்ச்சிகள் நடத்த சென்னை மாநகராட்சி தடை விதித்தது.

இந்நிலையில் ஆர்.ஏ.புரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 20 ஊழியர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதேப்போன்று மற்றொரு ஓட்டலில் நடத்தப்பட்ட சோதனையில் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இன்னும் பலரது முடிவுகள் வரவேண்டியுள்ளது. இந்நிலையில் அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் அதைத்தொடர்ந்து சாச்சுரேஷன் டெஸ்டையும் நடத்த சென்னை மாநகராட்சியும், பொது சுகாதாரத்துறையும் முடிவெடுத்துள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கடைபிடிக்காத ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.