சென்னையை சேர்ந்தவர் அருண் கணேஷ் (41). இவர் கடந்த சனிக்கிழமை திருப்பதிக்கு வந்துள்ளார். திருப்பதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். 

திருப்பதி விடுதியில் சென்னை பக்தர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை சேர்ந்தவர் அருண் கணேஷ் (41). இவர் கடந்த சனிக்கிழமை திருப்பதிக்கு வந்துள்ளார். திருப்பதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் உறவினர்கள் வருவதாக கூறி சாதாரண அறையில் இருந்து ஏசி அறைக்கு மாறியுள்ளார். ஆனால், நேற்று முழுவதும் அருண் கணேஷ் விடுதி அறையில் இருந்து வெளியே வரவில்லை. 

இதையும் படிங்க;- TN Rain Alert: குடை இல்லாமல் வெளியே போகாதீங்க! இந்த 10 மாவட்டங்களில் 3 மணிநேரத்தில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!

இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அருண் கணேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: வேலையை சீக்கிரமாக முடிச்சிடுங்க! சென்னையில் இந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை.!

பின்னர், அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக அருண் கணேஷ் தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.