இது இயற்கை நீதிக்கு முரணாணது.. என் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுங்கள்.. நீதிமன்ற கதவை தட்டிய சதீஷ்..!
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி தனியார் கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ரயிலில் தள்ளி மாணவியை கொலை சதீஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி தனியார் கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலித்து வந்த நிலையில், சத்யாவின் பெற்றோர் எதிர்ப்பால் தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் கொலை செய்ததாக சதீஷ் வாக்குமூலம் அளித்தார். இக்கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த சதீஷ் அக்டோபர் 14ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- ஒவ்வொரு முறையும் போலீஸ் இந்த வேலையை பார்த்ததால் தான் இரண்டு உயிர்கள் போச்சு! கொலையாளியை சும்மா விடாதீங்க! CPIM
இதனையடுத்து சத்யா கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல்துறை அளித்த பரிந்துரையை அடுத்து சென்னை காவல் ஆணையர் சதீஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தன் மீது பதியபட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சதிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க;- மாணவி சத்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அன்றே கோட்டைவிட்ட காவல்துறை - பரபர பின்னணி!
அவரது மனுவில் சட்டவிரோதாமாகவும், அடிப்படை உரிமையை மீறியும், அவசரகதியில் குண்டர் சட்டம் பதியபட்டுள்ளதாகவும், இது இயற்கை நீதிக்கு முரணாணது என தெரிவித்துள்ளார். எனவே சென்னை காவல் ஆணையரின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர், தமிழக அரசு உள்ளிட்டோர் 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க;- ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி சத்யாவை கொலை செய்த வழக்கு.. சதீஷ் மீது குண்டாஸ் பாய்ந்தது..!