Asianet News TamilAsianet News Tamil

ஒவ்வொரு முறையும் போலீஸ் இந்த வேலையை பார்த்ததால் தான் இரண்டு உயிர்கள் போச்சு! கொலையாளியை சும்மா விடாதீங்க! CPIM

 சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. இந்த வலியையும், வேதனையையும் தாங்க முடியாமல் அவரது தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டுள்ளது மேலும் துயரத்தின் உச்சமாக அமைந்துள்ளது.

Two lives lost due to police negligence.. k. balakrishnan
Author
First Published Oct 17, 2022, 7:25 AM IST

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. இந்த வலியையும், வேதனையையும் தாங்க முடியாமல் அவரது தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டுள்ளது மேலும் துயரத்தின் உச்சமாக அமைந்துள்ளது. சதீஷ் என்பவர் சத்யாவை ஒருதலையாக காதலித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரது காதலை சத்யா ஏற்க மறுத்த நிலையில் இந்தக் கொடூர கொலையை செய்துள்ளார். பெண்களைப் போகப் பொருளாக கருதும் ஆணாதிக்க மற்றும் நுகர்வு கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இந்தப் படுகொலையைக் கருத வேண்டியுள்ளது.  

இதையும் படிங்க;- இந்த துணிச்சல் தான் மாணவி சத்யாவை கொலை செய்ய தூண்டியிருக்கிறது... காவல்துறை விளாசும் ராமதாஸ்..!

Two lives lost due to police negligence.. k. balakrishnan

சதீஷ் மீது முன்கூட்டியே சில புகார்கள் கொடுக்கப்பட்டும், ஒவ்வொரு முறையும் எழுதி வாங்கிக்கொண்டு புகாரை முடித்து வைக்கும் வேலைதான் காவல்நிலையத்தில் நடந்திருக்கிறது. பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல் (STALKING)  என்பது தனிக்குற்றமாக ஆக்கப்பட்ட பின்பும் காவல்துறை இத்தகைய புகார்களை புறந்தள்ளுவது முற்றிலும் நியாயமற்றது. ஆண்-பெண் உறவு குறித்த ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பு. பள்ளிகளில் இதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பெண்களை இழிவாக சித்தரிக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

இதையும் படிங்க;-  அய்யோ! என் மகளுடன் என் சாமியும் போயிட்டாரே.. நான் இனி என்ன செய்வேன்.. கணவர் இறந்த செய்தியை அறிந்த மனைவி கதறல்

Two lives lost due to police negligence.. k. balakrishnan

காதல் என்பது இயல்பானது, வரவேற்கத்தக்கது. ஆனால், அது இருதரப்பு ஒப்புதலை கொண்டதாக அமைய வேண்டும். பெண்களை ஆண்களின் உடமையாக கருதும் மனநிலை தான் இத்தகைய கொலைகளுக்கு காரணமாக அமைகிறது. பாலியல் தொடர்பான புகார்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Two lives lost due to police negligence.. k. balakrishnan

தமிழகத்தில் பெண்கள் - சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதை தடுத்துநிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தக் கொடூர கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு விரைவாக உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க;-  தனது குடும்பத்தையே வாரி கொடுத்த தாய்க்கு இப்படி ஒரு நோயா? உதவி கரம் நீட்டிய காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்.!

Follow Us:
Download App:
  • android
  • ios