சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை புத்தாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும்: நிதின் கட்கரி

சென்னை - பெங்களூர் அதிவிரைவுச் சாலை 264 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைய இருக்கிறது. இதற்கு சென்ற வருடம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Chennai Bengaluru Expressway will be open from Jan 2024: Nitin Gadkari sgb

சென்னை - பெங்களூரு இடையேயான பயண நேரத்தை 2 மணிநேரமாகக் குறைக்கும் பெங்களூரு - சென்னை அதிவிரைவுச் சாலை வரும் ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தச் சாலை 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று முன்பு கூறியிருந்த நிலையில், இப்போது அதற்கு இரண்டு மாதம் முன்பாக விரைவில் திறக்கப்பட இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்த சாலை அமைக்கப்பட்டால் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு போக்குவரத்து நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிவிரைவுச் சாலை காரணமாக அந்தந்த பகுதியில் உள்ள நிலங்களின் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னையில் போக்குவரத்துச் சிக்கலை போக்க இதைச் செய்யுங்க! சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

Chennai Bengaluru Expressway will be open from Jan 2024: Nitin Gadkari sgb

"நாட்டின் சாலை போக்குவரத்தை மேம்படுத்தவும், நெடுஞ்சாலைகளில் வாகன நெருக்கடி மற்றும் போக்குவரத்து நேரத்தை குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும் சாலை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று நிதின் கட்கரி கூறினார்.

இந்த சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு முதலே நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் பாரத மாதா பரியோஜனா திட்டத்தின் கீழ் இதே போன்ற 26 புதிய அதிவிரைவுச் சாலைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தென்னிந்தியாவில் அமைக்கப்படும் முதல் அதிவிரைவுச் சாலையாக சென்னை – பெங்களூர் அதிவிரைவுச் சாலை அமைகிறது.

நான்கு வழிச்சாலையாக உருவாகிவரும் பெங்களூர் – சென்னை அதிவிரைவுச் சாலை பெங்களூர் ஹோஸ்கோடேவில் தொடங்கி ஸ்ரீபெரும்புதூர் வரை 264 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைய இருக்கிறது. இந்தச் சாலைப் பணிகள் சென்ற வருடம் தொடங்கியபோது, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டில் சென்னை, குடியாத்தம், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் வழியாகப் பயணிக்கும் இந்தச் சாலை ஆந்திராவின் வி கோடா, பாலமானேர் வழியாக கர்நாடகாவின் ஹோஸ்கோடேக்குச் செல்லும்.

கிருஷ்ண ஜெயந்திக்கு 88 வகையான பலகாரங்கள் செய்து அசத்திய மங்களூரு பெண்மணி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios