சென்னையில் போக்குவரத்துச் சிக்கலை போக்க இதைச் செய்யுங்க! சௌமியா அன்புமணி வலியுறுத்தல்
சென்னையில் உள்ள 56 சதவீதம் மக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் தான் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என சௌமியா அன்புமணி கூறினார்.

உலக தூய காற்று தினத்தை முன்னிட்டு, பசுமைத் தாயகம் அறக்கட்டளையின் தலைவரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவியுமான சௌமியா அன்புமணி சென்னை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, சென்னை மாநகரில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசித்திருக்கிறார். இந்தச் சந்திப்புக்குப் பின் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, பேசிய அவர், "சென்னை மாநகராட்சி 5,045 கோடியில் குப்பை எரிக்கும் ஆலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இதற்கு மாறாக சென்னையில் பூஜ்ஜிய குப்பை என்ற குப்பை இல்லா சென்னை என்ற கோட்பாட்டை விரைந்து செயல்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தினார்.
கிருஷ்ண ஜெயந்திக்கு 88 வகையான பலகாரங்கள் செய்து அசத்திய மங்களூரு பெண்மணி!
"மாநகராட்சிக்கு உட்பட்ட 10 இடங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தும் இடங்கள் கட்டும் திட்டத்தையும் சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும். சென்னையில் இருக்கும் 7 சதவீதம் பேர் மட்டுமே கார்களை பயன்படுத்தும் சூழலில், 56 சதவீதம் மக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையை தான் மேற்கொள்ள வேண்டும்" எனவும் எடுத்துரைத்தார்.
சென்னையில் தூய காற்று செயல் திட்டத்தை விரைந்து முழுமையாக செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திய சவுமியா, "சென்னை மாநகராட்சியில் தூய காற்று செயல் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தொடர்பான ஆய்வறிக்கையை 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே வெளியிடப்பட்டது" என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தத் திட்டம் குறித்து அதற்கு பின்னர் எவ்விதமான விளக்கமும் வெளிவரவில்லை. மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து முறையை விரைவில் செயல்படுத்த வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.
10% ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனம் ரோகூ!