கூடைபந்து போட்டியில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய மாணவி.. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் அபிநந்தனா(15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டார்.
விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று சென்னை திரும்பும் வழியில் மதுரை ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் அபிநந்தனா(15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க;- உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் காலமானார்..!
பின்னர், போட்டியில் பங்கேற்றுவிட்டு விருதுநகரில் இருந்து புறப்பட்டு மதுரை ரயில் நிலையத்திற்கு மாணவி தனது சக நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் வந்துள்ளார். அப்போது, அபிநந்தனா திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;- கோடை மழைக்கே தாக்குபிடிக்காத விளையாட்டு மைதானம்; முதல்வர் திறந்து வைத்த 8 மாதத்தில் சேதம்
இதனையடுத்து, அபிநந்தனாவின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து திலகர் திடல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறப்புக்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும்.
விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவி ஊர் திரும்பும் வழியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.