மாநகர பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்? போக்குவரத்து மாற்றம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

தற்போது கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட தடம் எண்.18D, 18P, M1, 45ACT இன்று முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.

Change of city bus routes in Chennai tvk

சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி, அப்பகுதியில் மாநகர் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் CMRL மெட்ரோ ரயில் நிலையங்கள் (Metro Stations) அமைத்திட பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல CMRL நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: School, Colleges Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஆகஸ்ட் 3ம் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

தற்போது கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட தடம் எண்:18D, 18P, M1, 45ACT இன்று முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.

தடம் எண்.14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு இயக்கப்பட்ட பேருந்து இன்று முதல் மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி, வழியாக கிண்டி ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட உள்ளது. மேலும், தடம் எண்.S14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை, மடிப்பாக்கம் கூட்ரோடு. வாணுவம்பேட்டை வழியாக NGO காலனி பேருந்து நிலையத்திற்கு 14M வழித்தடதிலேயே 25 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க:  Power Shutdown in Chennai: அய்யய்யோ.. இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

தடம் எண்: M1 CT கீழ்கட்டளை பேருந்து நிலையத்திலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது. தற்போது தடம் எண்: 76, 76B, V51, V51X ஆகிய வழித்தட பேருந்துகள் மேடவாக்கம் கூட்ரோடு. கீழ்கட்டளை, மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் இன்று முதல் வழித்தடம் மாற்றி மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது. மேலும் கீழ்கட்டளையிலிருந்து மூவரசன்பேட்டை, நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட்ட M18C, 18N மற்றும் N45B வழித்தடங்கள் மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios