ஒரு மணிநேரத்துல சென்னை டூ பெங்களூரு போகலாம்! விரைவில் வரும் அதிவேக ரயில் திட்டம்!

மணிக்கு 350 கிமீ வேகத்தில் இந்த ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டிருக்கிறது.  இந்த புல்லட் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 250 கி.மீ. ஆக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Can go from Chennai to Bangalore in an hour! High speed train project coming soon! sgb

சென்னையும் பெங்களூருவும் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய மெட்ரோ நகரங்களாக உள்ளன. இந்த நகரங்களுக்கு இடையில் ஏற்கெனவே பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது இந்த வழித்தடத்தில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் வழித்தடம் 463 கி.மீ. தூரம் நீளும் என்றும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் செல்லும் என்றும் சொல்லப்படுகிறது. பெங்களூருவில் 3 நிறுத்தங்கள் உள்பட மொத்தம் 11 நிறுத்தங்களுடன் இந்த புல்லட் ரயில் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மணிக்கு 350 கிமீ வேகத்தில் இந்த ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டிருக்கிறது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகபட்ச வேகம் மணிக்கு 320 கி.மீ.க்குள் கட்டுப்படுத்தவும் தீர்மானித்துள்ளது. இந்த புல்லட் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 250 கி.மீ. ஆக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் சென்னையில் இருந்து மைசூருக்கு வெறும் 90 நிமிடத்தில் பயணிக்க முடியும். தமிழ்நாட்டில் இந்த ரயில் சென்னை, பூந்தமல்லி நிலையங்களில் மட்டும் நிற்கும். சித்தூர், கோலார், கோடஹள்ளி, ஒயிட்ஃபீல்டு, பையப்பனஹள்ளி, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி, கெங்கேரி, மாண்டியா வழியாக மைசூர் வரை செல்லும எனக் கூறப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து குறையுது! தங்கத்தில் முதலீடு என்ன வழிகள் இருக்குன்னு தெரியுமா?

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை- அகமதாபாத் இடையே அமைய உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அந்த வேலை முடிந்ததும் சென்னை- பெங்களூர் - மைசூர் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த ரயிலுக்காக தனியாக மேம்பாலங்களும், சுரங்கப்பாதைகளும் அமைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். 30 கி.மீ. தூரத்திற்குச் சுரங்கப்பாதையில் தான் ரயில் செல்லும். சென்னையில் 2.5 கி.மீ. தூரம் அமையும் நிலத்துக்கு அடியில் பயணிக்கும். சித்தூரில் 11.8 கி.மீ, பெங்களூரு புறநகர் பகுதியில் 2 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை அமையும். பெங்களூரு நகரில் சுமார் 14 கி.மீ. தொலைவுக்குச் சுரங்கப்பாதை அமைக்க வேண்டியிருக்கிறாதாம்.

மத்திய அரசு இந்த புல்லட் ரயில் வழித்தடத்தை இரு கட்டங்களாகச் செயல்படுத்த உள்ளது. முதல் கட்டத்தில் சென்னை - பெங்களூர் இடையே உள்ள 306 கி.மீ. தூரத்துக்கு வழித்தடம் அமைக்கப்படும். இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல வெறும் ஒரே மணிநேரத்தில் செல்லலாம். பெங்களூரு - மைசூரு இடையேயா 157 கி.மீ. தொலைவுக்கு இரண்டாம் கட்டத்தில் வழித்தடம் அமைக்கப்படும்.

இந்த புல்லட் ரயில் திட்டத்தில் 258 கி.மீ. வழித்தடம் கர்நாடகாவில் இருக்கும். 132 கி.மீ. தமிழகத்தில் இருக்கும். 313 நகரங்களையும் கிராமங்களையும் கடந்து செல்லும். தென்னிந்தியாவில் கொண்டுவரப்படும் மிக முக்கியமான ரயில் வழித்தடமாக இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

Income Tax Slab: வருமான வரியில் ரூ.18,200 சேமிப்பது எப்படி? மத்திய பட்ஜெட்டில் டாப் ஹைலைட்டே இதுதான்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios