- Home
- Gallery
- Income Tax Slab: வருமான வரியில் ரூ.18,200 சேமிப்பது எப்படி? மத்திய பட்ஜெட்டில் டாப் ஹைலைட்டே இதுதான்!
Income Tax Slab: வருமான வரியில் ரூ.18,200 சேமிப்பது எப்படி? மத்திய பட்ஜெட்டில் டாப் ஹைலைட்டே இதுதான்!
ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்தும்போது ரூ.18,200 வரை சேமிக்கலாம். வருமான வரி செலுத்துபவர்கள் இந்தச் சலுகையை எப்படிப் பெறலாம் என்று பார்க்கலாம்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் புதிய வரி முறையில் திருத்தங்களை அறிவித்தார். திருத்தப்பட்ட வருமான வரி அடுக்கின் மூலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் வரிச்சுமை குறையும்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.17,500 வரை வரியைச் சேமிக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அதற்கு மேல் ரூ. 18,200 வரை கூட சேமிக்கலாம் என்று வல்லுநர்கள் விளக்குகிறார்கள்.
வரி விலக்குகளைப் பற்றிக் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, இந்த விளக்கம் பயனுள்ளதாக இருக்கும். ரூ.10 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் தனிநபர்கள் இப்போது திருத்தப்பட்ட புதிய முறையைத் தேர்ந்தெடுத்தால், ரூ.17,500 சேமிப்பார்கள். இந்தத் தொகையில் 4 சதவீதம், அதாவது ரூ.700 செஸ் வரி குறைப்பு உண்டு. உள்ளது. இரண்டும் சேர்த்து மொத்தம் ரூ.18,200 சேமிப்பாக இருக்கும்.
ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடிக்குள் இருந்தால், சேமிக்கும் தொகை ரூ.20,020 ஆக இருக்கும். இதில் செஸ் வரி சலுகையும் அடக்கம். இதேபோல ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையிலான ஆண்டு வருமானத்துக்கு நிகர சேமிப்பு ரூ.20,930 ஆக அதிகரிக்கும். ஆண்டுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை வருமானம் இருந்தால், மொத்தம் ரூ.22,750 சேமிக்க முடியும்.
பட்ஜெட்டில் மற்றொரு முக்கிய வருமானச் சலுகையும் அறிவிக்கப்பட்டது. புதிய வரி முறையின் கீழ் நிலையான வரி கழிவு ரூ.50,000 இல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.7.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.