Asianet News TamilAsianet News Tamil

பாஜகவை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு பாதுகாப்பு வேண்டுமா? கடுப்பான நீதிபதி! என்ன செய்தார் தெரியுமா?

பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளராகவும், 49 செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய வெங்கடேஷ். இவர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி  உரிய பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

BJP Backward Classes State Secretary Venkatesh petition dismissed..Chennai High Court tvk
Author
First Published Apr 2, 2024, 6:43 AM IST

சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ள பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ்க்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளராகவும், 49 செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய வெங்கடேஷ். இவர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி  உரிய பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

BJP Backward Classes State Secretary Venkatesh petition dismissed..Chennai High Court tvk

அந்த மனுவில், நான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். கல்வி சார்ந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். தன்னுடைய உறவினர் ஒருவரை முத்துசரவணன் என்பவர் படுகொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு முத்துச்சரவணை காவல்துறை என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டருக்கு நான் தான் காரணம் என சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இதனால், தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. ஆகையால் எனக்கும் தனது குடும்பத்துக்கும்  உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையும் படிங்க: உயர் அழுத்த மின்கம்பிகளுக்குக் கீழ் நின்று போன் பேசினால் மொபைல் வழியாக மின்சாரம் பாயுமா?

BJP Backward Classes State Secretary Venkatesh petition dismissed..Chennai High Court tvk

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாஜகவைச் சேர்ந்த வெங்கடேஷ் மீது 10 குற்ற வழக்குகள், ஆந்திராவில் 49 வழக்குகள் உள்ளன. இவருடைய பெயரில் குற்றங்களுக்கான சரித்திர பதிவேடு உள்ளது. இதுமட்டுமின்றி செம்மரக் கடத்தல் வழக்கு, துப்பாக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு முடியாது என வாதிடப்பட்டது. 

இதையும் படிங்க:  இந்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் தரமான சம்பவம் இருக்காம்.. குட்நியூஸ் சொன்ன கையோடு ஷாக்கிங் நியூஸ் வானிலை மையம்

BJP Backward Classes State Secretary Venkatesh petition dismissed..Chennai High Court tvk

இதனையடுத்து  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எந்த குற்றப்பின்னணியும் இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தால், அவருக்கு எந்த வித தயக்கமும் இல்லாமல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருப்பேன். வெங்கடேஷ்க்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இதேபோல் குற்றவாளிகள் பலரும் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழல் உருவாகும். அது நீதித்துறையின் மீதான நம்பிக்கையும் இழக்க வைக்கும். அவர் மீது செம்மரக்கடத்தல் வழக்குகளும் நிலுவையில் இருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios