உயர் அழுத்த மின்கம்பிகளுக்குக் கீழ் நின்று போன் பேசினால் மொபைல் வழியாக மின்சாரம் பாயுமா?
உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழ் நின்றுகொண்டு மொபைலில் பேசினால் மின்சாரம் பாயும் ஆபத்து உள்ளதா?
சென்னையில் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் நாகம்மை நகரைச் சேர்ந்த 17 வயது இளைஞர் சந்தோஷ். அண்மையில் 12ஆம் தேர்வு வகுப்பு எழுதியுள்ள இவர் மார்ச் 29ஆம் தேதி, தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று மொபைலில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டுக்கு அருகில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. சந்தோஷின் அலறல் சத்தப் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பகத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
90% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். திருமுல்லைவாயல் போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். உயரழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் திருமுல்லைவாயில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாருமே எலக்ட்ரிக் கார் வாங்கலாம்! கம்மி விலையில் களமிறங்கும் மாருதி சுசுகி eVX!
இந்தச் சம்பவம் உயரழுத்த மின்கம்பிகளால் ஏற்படும் ஆபத்து குறித்த அச்சத்தையும் கிளப்பி விட்டுள்ளது. உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழ் நின்றுகொண்டு மொபைலில் பேசினால் மின்சாரம் பாயும் ஆபத்து உள்ளதா? என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுகிறது.
இது குறித்து விளக்கம் கூறியுள்ள அண்ணாமலை பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியர் சக்திவேல், "மொபைல் மின்காந்த கதிர்வீச்சுக்கும் உயரழுத்த மின்கம்பிகளில் செல்லும் மின்சாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உயர் அழுத்த மின்கம்பிகளுக்குக் கீழ் நின்று பயன்படுத்தினால், எந்தக் பாதிப்பும் ஏற்படாது" என்று கூறுகிறார்.
ஆனால், "காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, அதன் மின்கடத்தாத் தன்மை குறைந்துவிடும். அப்போது உயர் அழுத்த மின்கம்பிக்குக் கீழ் நின்றால், அந்த நபரே மின்கடத்தியாக மாறி, அவரது உடலில் மின்சாரம் பாயக்கூடும்" எனவும் அவர் விளக்கியுள்ளார்.
அப்பாவைப் பிளான் பண்ணி கொன்ற மகன்... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கரூர் போலீஸ்!