சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. பைக் & கார்கள் நீரில் மூழ்கியது - வைரல் வீடியோ
சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,23.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தது.
மேலும் இன்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது என்றே சொல்லலாம்.
அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையின் மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளான கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை ,ஆலந்தூர், கோடம்பாக்கம், முடிச்சூர், தேனாம்பேட்டை, பெருங்களத்தூர், சேலையூர், நந்தனம், கொளத்தூர் உள்ளிட்ட சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.