மதுபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாவிட்டால் வாகனம் ஏலம்.. சென்னை காவல்துறை எச்சரிக்கை
சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக விதிக்கப்பட்ட அபராத தொகையை 14 நாட்களுக்குள் செலுத்தவில்லையென்றால், சம்பந்தப்பட்ட நபரின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலம் விடப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் சட்ட விதிகளின் படி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் , பழைய கட்டணத்தை விட 3 முதல் 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அதனபடி ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000யும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றால் ரூ.1000யும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1000யும் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒருவர் மீண்டும் இதே விதிமீறலுக்கு உள்ளானால் ரூ.5000 அபாரதம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க:மக்களே உஷார் !! சென்னையில் நாளைக்கு அடித்து ஊற்றுமா மழை..? சுட சுட வெளிவந்த வெதர் அப்டேட்..
அதே போல் வாகன் உரிமம் இல்லாமல் இருந்தால் ரூ.5000, சீட்பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1000, No Parking பகுதியில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.500யும் இதே தவறை ஒருவர் மீண்டும் செய்தால் ரூ.1500 வசூலிக்கப்படும்.
இந்நிலையில் சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிவரும் நபர், அடுத்த 14 நாட்களில் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் சம்மந்தப்பட்டவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலத்தில் விடப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க:பள்ளி மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் துடிப்பு.. வெளியான அதிர்ச்சி காரணம்..!
அதுமட்டுமின்றி இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மது குடித்து விட்டு வாகனம் ஒட்டி அபராதத் தொகை செலுத்தாத 50 பேர்களின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.