Asianet News TamilAsianet News Tamil

#BREAKING சூடுபிடிக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்... பிப்.25ல் மத்திய பாதுகாப்பு படை வருகை...!

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வரும் பிப்ரவரி 25ம் தேதி மத்திய ஆயுதப்படையினர் தமிழகம் வருகின்றனர். 

Assembly election Duty Military force come to tamilnadu
Author
Chennai, First Published Feb 19, 2021, 2:05 PM IST

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் தற்போதிலிருந்தே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம், சுற்றுப்பயணம், கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் ரீதியான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாத இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Assembly election Duty Military force come to tamilnadu

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வரும் பிப்ரவரி 25ம் தேதி மத்திய ஆயுதப்படையினர் தமிழகம் வருகின்றனர். மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த 45 கம்பெனி படையினர் முதற்கட்டமாக தமிழகம் வர உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

Assembly election Duty Military force come to tamilnadu

 

இதையும் படிங்க: “நீயும், நானும் கருப்பு... குழந்தை மட்டும் எப்படி சிவப்பு?”... மனைவி மீதான சந்தேகத்தால் கணவன் செய்த கொடூரம்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இம்மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையம் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. எனவே மத்திய அரசு ஆயுதப்படையினரை தமிழகத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஒரு கம்பெனியில் 100 முதல் 150 வீரர்கள் வரை, 45 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வர உள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios