நீங்க முஸ்லீமா..?? சாரிங்க.. வீடு இல்லங்க.. மதத்தின்பெயரால் அவமானப்படுத்தப்பட்ட யூடியூப்பர்.
கிறிஸ்தவர்கள்-இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு வீடு மறுக்கப்படும் சம்பவங்கள் பரவலாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதத்தின் பெயரால் தனக்கு வாடகை வீடு மறுக்கப்பட்டதை யூடியூப் விமர்சகர் ஒருவர் தனது பேஸ்புக்கில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
கிறிஸ்தவர்கள்-இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு வீடு மறுக்கப்படும் சம்பவங்கள் பரவலாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதத்தின் பெயரால் தனக்கு வாடகை வீடு மறுக்கப்பட்டதை யூடியூப் விமர்சகர் ஒருவர் தனது பேஸ்புக்கில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் இஸ்லாமியர் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது. மதத்தின் பெயரால் புறக்கணிப்புகள் அவமானங்களை சிறுபான்மையினர் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல யூடியூப் ரிவ்யூவர் ரகுமான் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
செகண்ட் ஷோ என்ற யூடியூப் சேனலில் நடத்திவரும் இவர், திரைக்கு வரும் புதிய படங்களை ரிவ்யூ செய்து பதிவேற்றி வருகிறார். தனது தனித்துவமான ரிவ்யூவால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் ரகுமான்.இந்நிலையில் தனது மனைவியுடன் சென்னையில் வசித்து வரும் அவர் வாடகைக்கு வீடு தேடி அலைந்ததையும், ஆனால் தான் ஒரு இஸ்லாமியர் என்பதால் தன் புறக்கணிக்கப்பட்ட வலி மிகுந்த அவமானத்தையும் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: பக்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த முகேஷ் அம்பானி.. ரூ.5 கொடி நன்கொடை வழங்கினார்..
திண்டுக்கல்லை சேர்ந்த தான் சிறுவயதிலேயே இந்த தீண்டாமையை அனுபவித்ததாகவும், தனது குடும்பம் இஸ்லாமியர்களின் வீடுகளில் மட்டுமே வாடகை இருந்ததாகவும், ஒருமுறை மாற்று சமூகத்தினரின் வீடுகளுக்கு வாடகை தேடிச் சென்றதில், அங்கு இஸ்லாமியர்கள் என்பதற்காக தனது குடும்பம் புறக்கணிக்கப்பட்டதாகவும் அந்த வலி தனக்கு சிறு வயதில் இருந்தே இருக்கிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னைக்கு பணி நிமித்தமாக வந்துள்ள தானும் தன் மனைவியும் வீடு தேடி அலைந்த இடத்தில் மதத்தின் பெயரால் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதை அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: கணவரென்றும் பாராமல் வெளுத்த மனைவி! காதலியுடன் ஷாப்பிங் சென்று சிக்கிக்கொண்டார்: வைரல் வீடியோ
போரூர் பகுதியில் வீடு தேடிய போது வீட்டில் நீங்கள் முஸ்லிமா.? சாரிங்க, எங்க அப்பார்ட்மென்ட் அசோசியேஷனில் முஸ்லிம் கிறிஸ்டியன்ஸ்க்கு வீடு தரக்கூடாது என்று ரூல்ஸ் இருக்கிறது, எனக்கும் நிறைய முஸ்லிம் கிறிஸ்டியன் பிரண்ட்ஸ் இருக்கிறார்கள். எனக்கு ஒன்னும் அதுல பிரச்சினை இல்லை, ஆனா எங்க அப்பார்ட்மெண்ட்ஸ் ரூல்ஸ் முஸ்லிம் கிறிஸ்டினுக்கு வீடு தரக்கூடாது என்பது தாங்க என கூறி, தான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணிக்கப்பட்டதாகவும் இதுபோன்ற நவீன தீண்டாமை சென்னையிலும் அதிகளிவில் நடந்து வருகிறது என்பதை வலியுடன் அவர் பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.