கணவரென்றும் பாராமல் வெளுத்த மனைவி! காதலியுடன் ஷாப்பிங் சென்று சிக்கிக்கொண்டார்: வைரல் வீடியோ
காதலியுடன் ஷாப்பிங் வந்த கணவரை பார்த்த மனைவி டெல்லியின் பரபரப்பான காஜியாபாத் சந்தையில் கணவரை துவைத்து எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது
காதலியுடன் ஷாப்பிங் வந்த கணவரை பார்த்த மனைவி டெல்லியின் பரபரப்பான காஜியாபாத் சந்தையில் கணவரை துவைத்து எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது
வடமாநிலங்களில் நேற்று கார்வா சவுத் என்ற பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த புனித நாளில், திருமணமான பெண்கள் நிலவைப் பார்த்து வணங்கி, கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று அவரிடம் ஆசிபெறுவது வழக்கம். அந்த புனிதமான நாளில் கணவரை துவைத்து எடுத்துவிட்டார் அவரின் மனைவி.
இந்திக்கு மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் பாடங்கள்: மத்தியப்பிரதேசத்தில் அமித் ஷா அறிமுகம் செய்கிறார்
வீட்டில் மனைவியை தவிக்கவிட்டு, கள்ளக்காதலியுடன் கணவர் டெல்லி காஜியாபாத் சந்தைக்கு ஷாப்பிங்கிற்கு வந்திருந்தார். ஆனால், தனது மனைவியும் இங்கு ஷாப்பிங் வருவார் என கணவர் எதிர்பார்க்கவில்லை.
பானி பூரியை மீண்டும், மீண்டும் வாங்கி ருசித்து சாப்பிடும் யானை..! சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ
ஆனால், மனைவியும், அவரின் தோழிகளும் நேற்று காஜியாபாஜ் சந்தைக்கு ஷாப்பிங் சென்றனர். அங்கு தனது கணவர் வேறு பெண்ணுடன் நின்று ஷாப்பிங் செய்வதைப் பார்த்த மனைவி கொதித்து எழுந்துவிட்டார். சாலையென்று பாராமல் கணவரின் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்து வெளுத்து வாங்கினார். மனைவிக்கு துணையாக அவரின் தோழிகளும் சேர்ந்து கொ ண்டன
கணவரை போட்டு மனைவியும் அவரின் தோழியும் துவைத்து எடுத்ததைப் பார்த்த காதலி, அவரை மீட்க வந்தார், ஆனால், மனைவியின் தோழிகள் அவரைவிடாமல் பிடித்து, அவரையும் நொறுக்கி எடுத்தனர். இந்த காட்சியை ஏராளமான மக்கள் நின்று வேடிக்கை பார்த்தனர்
இந்த விவகாரம் தொடர்பாக அந்த மனைவி கணவர் மீது போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். போலீஸாரும் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தனது தாய் வீட்டில் தனியாக வாழ்ந்துவருகிறார்.
இந்திய கோடீஸ்வரர்கள் ஏன் வெளிநாடுகளில் அலுவலகம் திறக்கிறார்கள்? காரணம் என்ன?
மனைவி இல்லாததைப் பயன்படுத்திக்கொண்ட கணவர் காதலியுடன் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் மனைவி தனது தாய் மற்றும் தோழிகளுடன் காஜியாபாத் சந்தைக்கு வந்தபோது, தனது கணவர் வேறு பெண்ணுடன் ஷாப்பிங் செய்து வருவதைப் பார்தது ஆத்திரமடைந்துள்ளார். முதலில் இருவருக்கும் இடையே தொடங்கிய வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது, கணவரை வெளுத்துவாங்கிவிட்டார்