பானி பூரியை மீண்டும், மீண்டும் வாங்கி ருசித்து சாப்பிடும் யானை..! சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ
அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு கடையில் யானை ஒன்று பானி பூரியை ருசித்து சாப்பிடும் வீடியோ வெளியாகி பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.
பானி பூரி சாப்பிடும் யானை
பிரபலமான சாட் ரக திண்பண்டங்களில் ஒன்றான பானி பூரி, பெரும்பாலான மக்களும் ருசித்த உண்ணும் திண்பண்டமாகும். சாலையோர கடைகளில் உள்ள மனிதர்களே பெரும்பாலும் பானி பூரியை ருசித்து வந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூரில் யானை ஒன்று பானி பூரி சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குட்டி பூரியின் தலையில் உடைத்து அதற்க்குள் கொஞ்சம் வெங்காயம், கொஞ்சம் உருளைக்கிழங்கு மசாலா, நிறைந்து வடியும் அளவிற்கு கொத்தமல்லியை அரைத்து கரைத்த புளிப்பேறிய சாறு ஊற்றி தரும் பானிபூரி பலரின் விருப்பாமான ஸ்னாக்ஸ் ஆக உள்ளது. இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமோடு வாங்கி சாப்பிடுவார்கள்.
கழுதை கறி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா ? ஆந்திராவில் அடிச்சு தூக்கும் விற்பனை !
மனிதர்களுக்கு போட்டியாக யானை
ஆனால் மனிதர்களுக்கு போட்டியாக மிகப்பெரிய பாலூட்டி விலங்கான யானையும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூரில் சாலை ஓரத்தில் உள்ள பானி பூரி கடை ஒன்றில் பானி பூரி வியாபாரம் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. அப்போது அந்த வழியாக பாகனோடு வந்த யானை பானி பூரி கடையில் பானி பூரி வாங்கி சாப்பிடுகிறது.
A post shared by 𝚂𝙾𝙾𝚁𝚈𝙰 𝙿𝚄𝚃𝙷𝚁𝙰𝙽 𝙺𝙰𝚁𝙽𝙽𝙰𝙽 (@soorya_puthran_karnnan)
மனிதர்கள் எப்படி பானி பூரியை ஒரு வாங்கி வாயில் வைத்த பிறகு அடுத்த பூரிக்காக காத்திருப்பார்களோ அதே போல யானையும் காத்திருந்து மீண்டும் வாயில் பானி பூரியை போடும் காட்சி தற்போது சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்