துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும் தீவிரவாதிகளை கொல்லுவதற்கு காரணமாக இருந்த நாய் ஜூம் பரிதாபமாக உயிரிழப்பு!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளை தைரியமாக எதிர்த்துப் போராடி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த ராணுவ 

Army dog Zoom fought terrorists with bullet injuries is died

தீவிராவதிகளை பிடிப்பதற்கு உதவும் நாய் ஜூம் கடந்த திங்கள் கிழமை பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தபோது,  தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயம் அடைந்தது. இதையடுத்து, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் நாய் ஜூமிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று உயிரிழந்து விட்டதாக ராணுவம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

ராணுவ அறிக்கையில், ''மருத்துவ கண்காணிப்பில் இருந்த நாய் ஜூம் இன்று மதியம் 12 மணிக்கு உயிரிழந்தது. இன்று காலை 11.45 மணி வரை நன்றாக இருந்தது. திடீரென, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது'' என்று தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ நகரில் இருக்கும் ராணுவ கால்நடை மருத்துவமனையில் நாய் ஜூம் சிகிச்சை பெற்று வந்தது. தீவிரவாதிகளை பிடிப்பதற்கு முயற்சித்தபோது, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பின்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முகத்தில் ஏற்பட்டு இருந்த காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்து வரும் 24 முதல் 48 மணி நேரம் மிகவும் மோசமானதாக இருக்கும். கண்காணித்து  வருகிறோம் என்று நேற்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று உயிரிழந்தது.

தீவிரவாதிகளை கொல்லுவதற்கு காரணமாக இருந்த ஜூம் நாய்க்கு அறுவை சிகிச்சை!!

ஜம்மு, காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கு நாய் ஜூம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று, தீவிரவாதிகள் இரண்டு முறை நாய் மீது சுட்டுள்ளனர். அப்போதும், தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் நாய் ஜூம் ஈடுபட்டது. நாய் ஜூமின் தீவிர வேட்டையினால், இரண்டு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொல்ல முடிந்தது. துணிச்சலுடன் போராடி, இறுதியில் உயிர்நீத்து இருக்கும் நாய் ஜூமிற்கு ராணுவத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தெற்கு காஷ்மீர் பகுதியில் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் நாய் ஜூம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எப்போதும் போல திங்கள் கிழமையும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடத்தில் இருந்து வெளியே வருவதற்கு  ஜூம் நாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

GST on Paratha: பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி உறுதி: சப்பாத்தி வேறு ரகமாம் !: குஜராத் ஏஏஏஆர் தீர்ப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios