நடிகர் ஆனந்தராஜ் தம்பி கனகசபை என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல நடிகர் ஆனந்தராஜ் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வந்தார். தேர்தல் வந்துவிட்டால் அதிமுகவுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா பொதுச்செயலாளரானதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சசிகலா அணியை கடுமையாக சாடினார். மேலும், ஜெயலலிதாவால் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்களுக்கு எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து அதிமுகவுக்கு ஒரு தலைமையை காட்டுகின்றனர். அது ஏற்புடையதாக இல்லை என்று கூறி அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

இதையும் படிங்க;-  வேறொருவருடன் மனைவி கள்ளக்காதல்...? ஆத்திரத்தில் தலையில் கல்லைப்போட்ட கொன்ற கணவன்..!

இந்நிலையில், நடிகர் ஆனந்தராஜின் தம்பி கனகசபை புதுச்சேரியில் இன்று விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கோவிந்த சாலை திருமுடி நகரைச் சேர்ந்தவர் கனகசபை (55). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று வீட்டுப் படுக்கை அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இது குறித்துத் தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;- விஐபிகளுக்கு இளம்பெண்கள் சப்ளை... விபச்சார தொழிலில் ஈடுபட்ட வந்த அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பெண் பிரமுகர் கைது..!

இதுகுறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையில் கனகசபை ஏலச்சீட்டு நடத்தி வந்ததும் அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் பிரச்சனை இருந்து வந்ததும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்ட கனகசபை, பிரபல திரைப்பட நடிகர் ஆனந்தராஜின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.