Asianet News TamilAsianet News Tamil

சம்பள உயர்வும் கொடுத்து கூடவே ஆப்பும் வைத்த போக்குவரத்து கழகம்!ஓட்டுநர்,நடத்துநர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

 14வது ஊதிய பேச்சுவார்த்தையின் படியும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாதத்திற்கு ரூ.10 கோடி தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ.3.40 கோடி பேருந்துகளில் விளம்பரங்கள் மூலமாக வருகிறது. மீதமுள்ள ரூ.6.60 கோடி பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் மூலமாகவே வசூலிக்க வேண்டும். 

Action order for government bus drivers and conductors
Author
First Published Sep 6, 2022, 9:05 AM IST

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- 14வது ஊதிய பேச்சுவார்த்தையின் படியும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாதத்திற்கு ரூ.10 கோடி தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ.3.40 கோடி பேருந்துகளில் விளம்பரங்கள் மூலமாக வருகிறது. மீதமுள்ள ரூ.6.60 கோடி பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் மூலமாகவே வசூலிக்க வேண்டும். பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாயை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பினால் கணக்கு முடக்கப்படும்... குழு அமைத்தது காவல்துறை!!

வருவாயை அதிகரிக்கவும் நிதிச்சுமையை குறைக்கவும் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து மண்டல மேலாளர்களும் பின்பற்றுமாறும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து கழகத்தில் பணியாற்றக்கூடிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு டீசல் சிக்கனத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 இந்த ஒரு சூழலில் தான் தொடர்ந்து ஏற்படக்கூடிய செலவினங்கனை கட்டுப்படுத்தும் விதமாக டிக்கெட்டுகளை முறையாக விற்பனை செய்து கூடுதல் வருவாயை ஈட்டுவதற்காக பேருந்து மற்றும் நடத்துனர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. 

இதையும் படிங்க;- மாணவ மாணவியர்கள் போதைக்கு அடிமையாகி குரூப் செக்ஸ்.. இந்த விஷயத்துல அவங்கள சுட்டுக்கொன்றாலும் தவறில்லை.. BJP.!

Follow Us:
Download App:
  • android
  • ios