Asianet News TamilAsianet News Tamil

மாணவ மாணவியர்கள் போதைக்கு அடிமையாகி குரூப் செக்ஸ்.. இந்த விஷயத்துல அவங்கள சுட்டுக்கொன்றாலும் தவறில்லை.. BJP.!

மாணவ மாணவியர்கள் ஹோட்டல்களில் அறை  எடுத்து தங்கி இம்மாதிரியான கூட்டு பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கிற அதே வேளையில், தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்பதையும், காவல் துறை கண்ணை மூடிக்கொண்டு உறங்கி கொண்டிருக்கிறது என்பதையும், கல்வித் துறை அலட்சியமாக உள்ளது.

There is nothing wrong with shooting criminals... Narayanan Thirupathy
Author
First Published Sep 5, 2022, 2:17 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் கவலையோடு போதை பொருட்கள் குறித்து பேசினாலும், அதன் புழக்கம் அதிகரித்து வருவது நிர்வாக சீர்கேட்டின் நிலையை வெளிப்படுத்துகிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- திருச்சியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவ மாணவியர்கள் போதைக்கு அடிமையாகி குரூப் செக்ஸில் ஈடுபட்டு வருவதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. போதை பொருள் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருவது கவலைக்குரியது. 

There is nothing wrong with shooting criminals... Narayanan Thirupathy

மாணவ மாணவியர்கள் ஹோட்டல்களில் அறை  எடுத்து தங்கி இம்மாதிரியான கூட்டு பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கிற அதே வேளையில், தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்பதையும், காவல் துறை கண்ணை மூடிக்கொண்டு உறங்கி கொண்டிருக்கிறது என்பதையும், கல்வித் துறை அலட்சியமாக உள்ளது என்பதையும். மனித நேயமற்ற ஹோட்டல் வியாபாரிகள் இந்த அவல நிலையை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் வெளிப்படுத்துகிறது. இரக்கமற்ற மனிதர்களின் பணத்தின் மீதான ஆசையே இவை அனைத்திற்கும் காரணம் என்பது கண்கூடு. 

There is nothing wrong with shooting criminals... Narayanan Thirupathy

உறுதியாக, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், கல்வி கொள்ளையர்களின் துணையின்றி இந்த படு பயங்கரமான கேவலம் நடைபெறாது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கவலையோடு போதை பொருட்கள் குறித்து பேசினாலும், அதன் புழக்கம் அதிகரித்து வருவது நிர்வாக சீர்கேட்டின் நிலையை வெளிப்படுத்துகிறது. அவர் சொன்னதை  செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். குற்றவாளிகளை சுட்டுக் கொன்றாலும் தவறில்லை. மாணவ சமுதாயத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அரசியல் வேற்றுமைகளை மறந்து அடுத்த தலைமுறையை  காப்போம் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios