கோயம்பேட்டில் எத்திலின் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்கள் பறிமுதல்.. உ.பா.து அதிகாரிகள் அதிரடி.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலின் மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஆறு டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலின் மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஆறு டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு தரமற்ற உணவுகளை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இது மாம்பழ சீசன் என்பதால் பல இடங்களில் எத்திலின் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. அதை சாப்பிடும் பொதுமக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இந்த வரிசையில் சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் விதிகளுக்கு புறம்பாக எத்திலின் மற்றும் ரசாயனக் கற்கள் பயன்படுத்தப்பட்டு பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையும் படியுங்கள்: உங்களை நம்பி தானே ஓட்டு போட்டோம்.. ஒன்றரை வருடமாக என்ன செய்தீர்கள்..? குமறும் ஆசிரியர்கள்..
இதனையடுத்து இன்று காலை 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஸ் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த பல கடைகளில் விதிக்கு புறம்பாக எத்திலின் மற்றும் ரசாயனக் கற்கள் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. தவறான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாநகராட்சி ஊழியர்கள் மூலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அப்பழங்களை அப்புறப்படுத்தி சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படியுங்கள்: Suriya : தம்பிக்கு பாராட்டுக்கள்.! நடிகர் சூர்யாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா ?
இதன்மூலம் 5 லட்சம் மதிப்புள்ள பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் கோயம்பேட்டில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினோம், அதில் பல கடைகளில் செயற்கையான முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தோம், எனவே ஏறக்குறைய 6 டன் மாம்பழங்கள் கைப்பற்றி உள்ளோம், இதன் மதிப்பு 5 முதல் 6 லட்சம் ரூபாய் இருக்கும். பலமுறை வியாபாரிகளுக்கு செயற்கை முறையில் பழங்களை எப்படி பழுக்க வைக்க வேண்டும் என்று வகுப்பு எடுத்திருக்கிறோம். ஆனால் இவர்கள் தொடர்ச்சியாக இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக பழத்தின் மீது ரசாயனக் கற்கள் வைப்பதன் மூலம் ஒரே நாளில் பழங்கள் பழுத்து விடுகின்றன, அதை உட்கொள்ளும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வாந்தி, வயிற்றுப் போக்கிற்கு ஆளாகின்றனர். தற்போது பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள கடை உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளோம். மேலும் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.