உங்களை நம்பி தானே ஓட்டு போட்டோம்.. ஒன்றரை வருடமாக என்ன செய்தீர்கள்..? குமறும் ஆசிரியர்கள்..
பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது என வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 13 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஆசியர்களை நியமனம் செய்ய உத்தரவு விடப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனையடுத்து இன்று பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது என வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க:தமிழகத்தில் இன்று கனமழை.. 7 மாவட்டங்களில் அலர்ட்.. வானிலை அப்டேட்..
மேலும் படிக்க:பைக் மீது மணல் லாரி பயங்கர மோதல்.. தூக்கி வீசப்பட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!
அப்போது பேசிய ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நிரந்தர பணியில் நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இதற்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று 13 வருடங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் வரை பணி நிரந்தரம் செய்யவில்லை. எங்களுக்கு தகுதி இருக்கிறது. எங்கள் உரிமை தான் நாங்கள் கேட்கிறோம் என்றும் அவர்கள் வேதனையுடன் கூறினர்.
2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் செய்வதாக வாக்குறுதி கொடுத்ததால் தான், நம்பி ஓட்டு போட்டோம். ஆனால் ஆட்சிக்கு வந்து கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் இந்த விஷயம் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறுகிறார். எனவே திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க:கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது.!
ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் குறித்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்களா..? மாட்டீர்களா..? என்று கூறிய அவர்கள், ஆசிரியர்கள், பல மாதங்களாக அங்காங்கே போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர். இன்றைக்கு நாங்கள் எதற்கும் துணிந்து தான் இங்கு வந்திருக்கிறோம். அமைச்சர் வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். பாமக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் ஆசியர்களை தற்காலிகமாக பணி நியமன செய்யும் அரசின் முடிவினை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.