கோயம்பேட்டில் மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பலி
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே அரசுப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சூர்யா (வயது 19). இவர் சென்னை கோயம்பேடு அருகே உள்ள கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் பி.காம். 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சூர்யா நேற்று வழக்கம் போல் கல்லூரியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக தேமுதிக அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 48 சி மாநகரப் பேருந்தின் முன் வாசல் பகுதியில் சூர்யா ஏறியுள்ளார். பேருந்து சற்று கூட்டமாக இருந்த காரணத்தாலும், சூர்யா ஏறிக்கொண்டு இருக்கும்போதே ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் மாணவன் சூர்யா நிலைத் தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
முதல்வர் உள்பட அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி - எச்.ராஜா பேச்சு
கீழே விழுந்த மாணவன் சூர்யா மீது மாநகரப்பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் மாணவன் சூர்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போக்குவரத்து காவல் துறையினர் மாநகரப்பேருந்து ஓட்டுநரான சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கலில் 250 ஆடுகள், 2500 நாட்டு கோழிகள என 20 ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்ட கறி விருந்து