Asianet News TamilAsianet News Tamil

சென்னை மற்றும் புறநகரில் 324 சாலைகள் மோசமான நிலையில் உள்ளன - அறப்போர் இயக்கம் பரபரப்பு அறிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 324 சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். 

324 roads damaged in chennai and outer areas says arappor iyakkam in chennai vel
Author
First Published Oct 10, 2023, 5:48 PM IST

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மக்கள் தணிக்கை மூலம் கண்டறியப்பட்ட மோசமான சாலைகள் குறித்து அறப்போர் இயக்கத்தினரின் ஆய்வறிக்கை குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர்  ஜெயராம் வெங்கடேசன், சென்னையில்  மாநகராட்சியில் மழைநீர் வடிகால் சாலை  பணிகள் 92 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் வெளிப்படை தன்மையோடு நிரூபிக்க வேண்டும். 

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள மோசமான சாலைகளை அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டறிந்து அதன் விவரங்களை அறப்போர் இயக்கத்திற்கு கடந்த இரண்டு வாரங்களாக அனுப்பி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 324 மோசமான சாலைகளை  அறிக்கையாக தொகுத்து அறப்போர் இயக்கம் இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.

அறப்போர் இயக்கம் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி  மோசமான சாலைகளை படம் எடுத்து பதிவிட ஒரு கூகுள் பார்ம் இணையதள லிங்கை  பொதுமக்களிடம்   கொடுத்து இருந்தோம். அதில் 212 ஆர்வலர்கள் அவரவர் பகுதியில் உள்ள மோசமான சாலைகளை கண்டறிந்து புகைப்படம் எடுத்து இந்த லிங்கில் 324 மோசமான சாலைகளை பதிவு செய்திருந்தனர்.

கைக்குழந்தைக்கு தாய் பால் ஊட்டிக்கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து பலி; ஈரோட்டில் பரபரப்பு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 192 மோசமான சாலைகளும், செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னை புறநகர் பகுதிகளில் 132 மோசமான சாலைகளும் பதிவாகியுள்ளன. சென்னையில் ராயபுரம், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பெருங்குடி மற்றும் சோழங்கி நல்லூர் மண்டலங்களில் மோசமான சாலைகள் அதிக அளவில் உள்ளதாக புகார்கள் வந்துள்ளன.  

மேலும் எந்த ஒரு திட்டமிடுதல் இல்லாமல் அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் லட்சக்கணக்கான வீடுகளுக்கு அனுமதி தரும் சி எம் டி ஏ தான் சென்னை புறநகர் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. புதிதாக வளர்ச்சி அடையும் பகுதிகளில் கூட சிஎம்டிஏ எந்தவித திட்டமிடல் செய்யாமல் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தாமல் உள்ளது. ஆயிரக்கணக்கான அப்பார்ட்மெண்டுகளுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டு அதற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் சென்னை புறநகர் பகுதிகளை சிஎம்டிஏ  சீரழித்து வருகிறது என குற்றம் சாட்டினர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சிஎம்டிஏ புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகளை உண்டாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளான உள்ளாட்சி அமைப்புகள் மின்சார வாரியம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் சிஎம்டிஏ போன்ற துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகப்படுத்துதல் மிகவும் அவசியம்.

சேலத்தில் துப்புரவு பணியாளர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் கைது

அறப்போர் இயக்கமானது தங்களது அறிக்கையை  தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளாட்சி ஆணையர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் என  அனைவருக்கும் புகாராக அனுப்பியுள்ளோம். சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு ஒரு அறிக்கையாகவும், சென்னை புறநகர் பகுதிகளுக்கு மற்றொரு அறிக்கையாகவும் நாங்கள் எடுத்துள்ள அறிக்கையை அனுப்பியுள்ளோம். இந்த சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தினால் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்தனர். 

மழைக்காலத்திற்கு முன்பாக புதிதாக போட முடியாத சாலைகள் மற்றும் வடிகால் பணிகளுக்கு மழைக்காலம் முடிவதற்கு முன்பாகவே நிதியை ஒதுக்கி டெண்டர் போட்டு மழைக்காலம் முடிந்த பிறகு உடனடியாக பணிகள் துவக்கப்பட வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளில் ஏற்படும் தாமததித்தினால் பல இடங்களில் சாலை சீர் செய்ய முடியாத நிலை உள்ளது. வெயில் காலத்திலேயே மழைநீர் வடிகால் பணிகளை வேகப்படுத்தி முடிக்க வேண்டும் எனவும் அறப்போர் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

சென்னையில்  மாநகராட்சியில் மழைநீர் வடிகால் சாலை பணிகள் 92 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் வெளிப்படை தன்மையோடு நிரூபிக்க வேண்டும் எனக் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios