சென்னையில் சிறுவனிடம் வழிப்பறி செய்த 3 பேர் சிறையில் அடைப்பு

சென்னையில் சிறுவனிடம் வெள்ளி செயினை வழிப்பறி செய்த 3 பேரை கைது செய்த காவல் துறையினர் மூவரையும் சிறையில் அடைத்தனர்.

3 persons arrested for robbery in chennai

வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை டி.பி.கே. தெருவை சேர்ந்த 15 வயது சிறுவன். நேற்று இரவு கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் அரசு குடியிருப்பு வழியாக சென்று கொண்டிருந்தான். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் தனியாக வந்த சிறுவனை மறித்து மிரட்டியுள்ளனர். மேலும் சிறுவன்  கழுத்தில் அணிந்திருந்த  வெள்ளி செயின்,  கையில் அணிந்திருந்த வெள்ளி பிரேஸ்லெட்டை பிடுங்கி சென்றுள்ளனர். 

இது தொடர்பாக சிறுவன் தனது பெற்றோருடன் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்கிற மக்கா மகேஷ் (வயது 29) திருவள்ளூர் மாவட்டம் மோகன் என்கிற ஆறு (26) பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஐயப்பன் என்கிற டேனி (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் - உரிமையாளர் அதிரடி

கைது செய்யப்பட்ட  3 பேர் மீதும் ஏற்கனவே  கொலை, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னையில் ஓடும் ரயிலில் தாலி செயின் பறித்துவிட்டு திருடன் தப்பி ஓட்டம்; சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios