இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து; தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர்கள் துடிதுடித்து பலி
சென்னை வண்டலூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த தசரதன்(வயது 20). மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தார். அதே வாலாஜாபாத் பகுதியை சந்தோஷ்(20) அதே பெரி கல்லுரியில் பி.ஏ. 3ம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் நண்பர்கள் என்பதால் ஒரே இருசக்கர வாகனத்தில் வாலாஜபாத் வண்டலூர் சாலையில் மண்ணிவாக்கம் பெரி கல்லூரிக்கு வந்துள்ளனர்,
இதனிடையே அதனூர் சந்திப்பு அருகே சென்றபோது அதே மார்கத்தில் வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைத்தடுமாரி தசரதன், சந்தோஷ் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
கொசுவை ஊதித்தள்ளுவது போல டிராக்டரை இடித்துவிட்டு சிட்டாக பறந்த தனியார் பேருந்து
கீழே விழுந்ததில் இருவரும் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில், மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி அருகே பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படையினர் கைது; உஷார் நிலையில் காவல் துறை