ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு?

கோவை மாவட்டம் உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சங்கமேஷ்வரர் கோவில் வாசலில் கடந்த மாதம் 23ம் தேதி  கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த  ஜமேசா முபின் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

18 people in Chennai linked to ISIS?

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தமிழக காவல்துறை நடத்திய சோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கோவை மாவட்டம் உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சங்கமேஷ்வரர் கோவில் வாசலில் கடந்த மாதம் 23ம் தேதி  கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த  ஜமேசா முபின் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்திய போது வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு  என்ஐஏவிடம் தமிழக அரசு ஒப்படைத்ததை அடுத்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க;- உஷாரான திமுக.. இந்த முறை பொங்கல் தொகுப்பு கிடையாது.. அதுக்கு பதில் ரூ.1000 வழங்க முடிவு.!

18 people in Chennai linked to ISIS?
 
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில், புதுப்பேட்டை, பெரம்பூர், ஜமாலியா, மண்ணடி, கோவையில் கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதலே சோதனை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க;-  கோவை கார் வெடி விபத்து..! சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு..! கோயிலில் விசாரணை

18 people in Chennai linked to ISIS?

இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட அமைப்புடன் பண பரிவர்த்தனை மேற்கொண்டதாக 5 பேர் மீது புகார் எழுந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலின் படி சென்னை நகர் முழுவதும் காவல்துறையினர் தனியாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் என்ஐஏ சோதனை நடந்து வரும் நிலையில் தமிழக காவல்துறையினரும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சென்னையில் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் பட்டியலை தமிழக காவல்துறை தயார் செய்கிறது.

இதையும் படிங்க;- கோவை கார் சிலிண்டர் வெடிப்பு.. ஆக்‌ஷனில் இறங்கிய NIA.. தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனை..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios