உஷாரான திமுக.. இந்த முறை பொங்கல் தொகுப்பு கிடையாது.. அதுக்கு பதில் ரூ.1000 வழங்க முடிவு.!
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரூ.1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த முறை திமுக அரசு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்தே ஏகப்பட்ட புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையும் படிங்க;- சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு.. முதல்வர் ஸ்டாலின்..!
விநியோகிக்கப்படும் பொருள்களின் தரம் சரியில்லை, புளியில் பல்லி, பரிசு பணம் எங்கே என்று பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தன. பொங்கல் பரிசு தொகுப்பில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், 2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இந்த முறை விமர்சனங்களும் எழாதவாறு இருக்க பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரூ.1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
இதையும் படிங்க;- அதிமுகவின் ஆட்சியில் தமிழ்நாடே சீரழிப்பு..! அதை சரி செய்ய ரொம்ப வருஷம் ஆகும்.?- மு.க.ஸ்டாலின்