தேசிய நெடுஞ்சாலையில் தவறான பெயர் பலகை! வழிமாறி சென்று அவதிப்படும் வாகன ஓட்டிகள்!

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் உள்ள பெயர் பலகையில் பெரம்பலூர் செல்வதற்கான வழி தவறாகக் காட்டப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைகின்றனர்.

Vehicles diverted by wrong nameplates in Ariyalur national highways

திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள தவறான பெயர் பலகையால் பலர் வழி மாறி சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால் அங்கு சரியான பெயர் பலகையை வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவரும் பாதையாக உள்ளது. கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, பாண்டிச்சேரி, சென்னை போன்ற பல மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் அந்த வழியாகச் செல்கின்றன. அதிவிரைவு பஸ்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.

வேலை செய்யாத மைக்கை எரிச்சலுடன் தூக்கி எறிந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!

இந்த வழித்தடத்தில் இன்னும் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.  சில பகுதிகளில் மட்டும் ஊர்களுக்கான பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. வி.கைகாட்டியை அடுத்த தேளூர் கயர்லாபாத் காவல் நிலையம் அருகே விளாங்குடியில் இருந்து வருபவர்களுக்கு தெரியும் வகையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை தவறாக உள்ளது. அதில், இடதுபுறம் சென்றால் முத்துவாஞ்சேரி, நேராக சென்றால் திருச்சி, வலது புறம் சென்றால் பெரம்பலூர் என்று குறிப்பிட்டுள்ளது.

Vehicles diverted by wrong nameplates in Ariyalur national highways

அந்த இடத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்குச் சென்று வி.கைகாட்டியில் வலதுபுறம் திரும்பி பெரம்பலூர் செல்லலாம். பெயர் பலகை தவறாக இருப்பதால் புதிதாக அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரம்பலூர் செல்வதற்கு வேறு வழியில் செல்கிறார்கள். வி.கைகாட்டியில் இருந்து கொஞ்ச தூரம் சென்று வலதுபக்கம் தேளூர் கிராமத்தையும் தாண்டி சென்றுவிடுகிறார்கள்.

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரையும் பாஜக உதவிக் குழு: அண்ணாமலை தகவல்

இப்படியே தினமும் பல வாகனங்கள் தவறான வழியில் சுற்றிவிட்டு வழி தவறி வந்துவிட்டதை அறிந்து ஊரைச் சுற்றிக்கொண்டு செல்கிறார்கள். பயணிக்கு ஏற்படும் இந்த அநாவசிய அலைச்சலைத் தவிர்க்க உடனடியாக வி.கைகாட்டி பகுதியில் 

எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு பெரம்பலூர் குறிப்பிட்டுள்ள பெயரை முறையான இடத்தில் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள தவறான பெயர் பலகையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

பாதி சம்பளத்தை ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கொடுங்க: வருண் காந்தி வலியுறுத்தல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios