காடுவெட்டியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டி கிராமத்தில் இன்று அதிகாலை தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

more than 10 passengers injured at private bus accident in ariyalur district

சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்கத்தின் 25வது  மாநாடு நடைபெறுகிறது. இதற்கு கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை மீன்சுருட்டி அடுத்த காடுவெட்டி கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்திற்குச் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்தவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி 3 பேர் கவலைக்கிடம்

பேருந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து மாநாட்டிற்கு சென்றவர்கள் சென்னை செல்லாமல் மாற்று பேருந்து மூலம் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் நோக்கி சென்றனர். ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து மீன்சுருட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் மெய்யநாதனின் கார் மோதி மனைவி கண் முன்னே புதுமாப்பிள்ளை பலி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios