ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியை 18ம் தேதி ஆடுகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்தவுடன் அங்கிருந்து நேரடியாக இந்திய அணி, நியூசிலாந்து செல்கிறது. 

நியூசிலாந்தில் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. நியூசிலாந்து தொடர் பிப்ரவரி 10ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. அந்த தொடரில் மார்ச் 13ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து ஜிம்பாப்வே அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆட இருந்தது. ஆனால் உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்க உள்ளதால் ஐபிஎல் 12வது சீசன் வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்குகிறது.  மார்ச் 23ம் தேதி ஐபிஎல் தொடங்க உள்ளதால் ஜிம்பாப்வே அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது பாதிக்கப்படும். எனவே அந்த தொடர் உலக கோப்பைக்கு பின்னர் நடத்தப்பட உள்ளது.