Asianet News TamilAsianet News Tamil

அவரை தவிர எல்லாரையும் எடுங்க!! ஜாகீர் கான் வேண்டாம்னு சொல்லும் அந்த ஒருத்தர் யார்..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எந்தெந்த வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாம் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் ஆலோசனை தெரிவித்துள்ளார். 
 

zaheer khan picks fast bowling unit for australia series
Author
India, First Published Dec 3, 2018, 5:36 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எந்தெந்த வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாம் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமான தொடர். வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை தழுவிவரும் இந்திய அணி, தொடர் தோல்விகளிலிருந்து மீள இந்த தொடரை வெல்வது அவசியம். அதேபோல ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவிவரும் ஆஸ்திரேலிய அணியும் இந்த தொடரை வென்று உத்வேகம் பெறும் முனைப்பில் உள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் வலுவிழந்து ஆஸ்திரேலிய அணி திணறிவரும் நிலையில், இந்திய அணி முன்னெப்போதையும் விட வலுவான வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றுள்ளது. பேட்டிங்கில் மட்டுமே சிறந்த அணியாக விளங்கிய இந்திய அணி, தற்போது மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. 

பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என நல்ல கலவையிலான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. எனவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இந்த முறை இந்திய அணி சிறப்பாக ஆடி தொடரை வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

zaheer khan picks fast bowling unit for australia series

இந்நிலையில், எந்தெந்த வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாம் என்று ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஜாகீர் கான், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து ஸ்விங் ஆகாது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆடுகளங்களை போல ஸ்விங் ஆகாது. ஆனால் நல்ல வேகத்துடன் பவுன்ஸ் ஆகும். எனவே நல்ல ஸ்விங் பவுலரான புவனேஷ்வர் குமாரின் பவுலிங் ஆஸ்திரேலியாவில் எடுபடாது. நல்ல ஃபார்மில் இருக்கும் ஷமி, அருமையான ரிதத்தில் வீசிக்கொண்டிருக்கிறார். பும்ரா மாயாஜாலங்களை நிகழ்த்துகிறார். உமேஷ் யாதவ் நல்ல ஸ்டிரைக் பவுலர். எனவே இவர்கள் மூவரையும் முதன்மை ஆப்ஷனாக வைத்துக்கொள்ளலாம். இஷாந்த் சர்மாவும் ஒரு சாய்ஸ். எனவே இவர்கள் நால்வரில் மூவரை ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தலாம் என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios