சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அர்ஜென்டீனாவின் குய்டோ பெல்லாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது.

இதில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அர்ஜென்டீனாவின் குய்டோ பெல்லாவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த் ஆட்டத்தில் 6-7 (5), 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் குய்டோ பெல்லாவை வீழ்த்தினார் யூகி பாம்ப்ரி.

இந்த வெற்றியின்மூலம் யூகி பாம்ப்ரி காலிறுதியில் கால்பதித்தார்.