Young Indian players who played better in IPL

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி இங்கிலாந்து, அயர்லாந்து, ஆப்கானிஸ்தானுடன் நடைபெறவுள்ள பல்வேறு போட்டிக்களுக்கான இந்திய அணியில் பல்வேறு இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய அணி வரும் ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, இங்கிலாந்துடன் டெஸ்ட், ஒரு நாள், டி 20 போட்டிகளில் கலந்து கொள்கிறது. 

ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் போட்டியிலும், அயர்லாந்துடன் இரண்டு டி 20 போட்டிகளும், இங்கிலாந்துடன் 5 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி 20 போட்டிகளில் இந்தியா மோதுகிறது. 

இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் பிசிசிஐயால் நேற்று அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியில் இடம் பெற்றுள்ள ஷ்ரேயஸ் ஐயர், பஞ்சாப் அணியின் கேஎல். ராகுல், ஐதராபாத் பந்துவீச்சாளர் சித்தார்த் கெளல் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை அணியில் சிறப்பாக ஆடி வரும் அம்பட்டி ராயுடு 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அணியில் இடம் பெறுகிறார். 

இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்களில் "ஆப்கன் நாட்டுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக செயல்படுவார். விராட் கோலிக்கு பதிலாக கருண் நாயர் விளையாடுவார். இதில் வீராட் கோலி பங்கேற்கவில்லை" போன்ற தகவல்கள் பரவி வருகின்றன.