You athlete you want to become a player? Government leads lo
இந்தியாவில் விளையாட்டு வீரர், வீராங்கனையாக வேண்டும் என்று விரும்புவோர், தங்களது விளையாட்டு திறனை விடியோ பதிவு மற்றும் தனிப்பட்ட தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கான இணையதளம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
அதில், பதிவு செய்தால் இந்திய விளையாட்டு ஆணையம் உங்களை அடையாளம் கண்டு உங்களை விளையாட்டு வீரராக உருமாற்றும்.
இதுகுறித்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து கூறியதாவது:
“இந்தியாவில் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணும் விதமாக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
வீரர்கள் அதில் தங்களைப் பற்றிய விடியோ பதிவு மற்றும் தனிப்பட்ட தகவல்களை பதிவேற்றம் செய்யலாம். அந்தத் தகவல்களைக் கொண்டு இந்திய விளையாட்டு ஆணையம் தகுந்த வீரர்களை தேர்வு செய்யும்.
அதேபோல, 2020, 2024, 2028 ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் ஆண்டுதோறும் 1,000 குழந்தைகளை விளையாட்டுத் துறையில் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அந்தக் குழந்தைகள் பயிற்சிக்காக தலா ரூ.5 இலட்சம் என்ற அளவில் 8 ஆண்டுகளுக்கு செலவிடப்பட உள்ளது” என்று விஜய் கோயல் கூறினார்.
