You are a star of hope - a greetings letter to the Tamilians who won the Arjuna Award ...
நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறீர்கள் என்று அர்ஜூனா விருது பெற்ற தமிழர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான அமல்ராஜ் தேசிய, காமன்வெல்த் போட்டிகளிலும், ஆரோக்கிய ராஜீவ் ஓட்டப் பந்தயத்திலும், பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கும் அர்ஜூனா விருதை மத்திய அரசு அளித்துள்ளது.
இதற்காக மூன்று பேருக்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனித்தனியே வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “அர்ஜூனா விருது கிடைத்ததற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இடையூறுகளைத் தாண்டி வெற்றிகள் பல பெற்று சாதனை படைக்க விரும்பும் அனைவருக்கும் தாங்கள் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறீர்கள்” என்று தெரிவித்து உள்ளார்.
