World Super Series Badminton Sindhu proved to be the top player in the third match

உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் குரூப் பிரிவு 3-வது ஆட்டத்திலும் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றிப் பெற்று அசத்தியுள்ளார்.

உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டி துபையில் நடைப்பெற்று வருகிறது, போட்டியின் ஒவ்வொரு பிரிவில் இருக்கும் வீரருடனும் ஒருமுறை மோத வேண்டும். அதில், இரண்டு முறை வெற்றிப் பெறுபவர் அரையிறுதிக்கு முன்னேறுவார்.

அதன்படி, இந்தியாவின் பி.வி.சிந்து, தனது மூன்றாவது ஆட்டத்தில் ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் மோதினார். அதில், 21-9, 21-13 என்ற செட் கணக்கில் அகானே யமகுச்சியை வீழ்த்தினார் பி.வி.சிந்து.

குரூப் பிரிவில் ஏற்கெனவே இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம், ஏற்கனவே அரையிறுதிக்கு சிந்து தகுதி பெற்றுவிட்டார். இந்த நிலையில் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தான் முன்னனி வீராங்கனை என்று நிரூபித்துவிட்டார்.

சிந்து அரையிறுதியில் சீன வீராங்கனை சென் யூபேவை எதிர்கொள்கிறார்.