World Cup 2018 - First match Spain - Portugal teams conflict ...
வரும் 15-ஆம் தேதி நடைபெறும் உலக கோப்பை 2018-ன் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் - போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் 14-ஆம் தேதி மாஸ்கோவில் தொடங்குகின்றன. இதன் தொடக்க ஆட்டத்தில் ரஷியா - சௌதி அரேபிய அணிகள் மோதுகின்றன.
இதன் தொடர்ச்சியாக கால்பந்து ஜாம்பவான்களின் முதல் ஆட்டமாக ஸ்பெயின் - போர்ச்சுகல் அணிகள் 15-ஆம் தேதி சோச்சியில் நடக்கிறது. இதுவரை உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு போர்ச்சுகல் ஒருமுறை கூட தகுதி பெறாத நிலையில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவையே பெரிதும் நம்பி உள்ளது.
கடந்த 2016 யூரோ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஊக்கத்தில் போர்ச்சுகல் அணி இந்த உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது அதேநேரத்தில் 2010-ஆம் ஆண்டு உலக சாம்பியனான ஸ்பெயின் அணி கடந்த 2014 உலகக் கோப்பையில் நெதர்லாந்து, சிலி போன்ற அணிகளிடம் தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.
இந்தாண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடியதின் மூலம் ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது. 2010-ல் சாம்பியன் பட்டம் வெல்ல காரணமான ஆன்ட்ரெஸ் இனியெஸ்டா ஸ்பெயின் அணிக்காக தனது கடைசி உலகக் கோப்பை போட்டியில் ஆட உள்ளார்.
அதேநேரத்தில் ஐந்து முறை தங்கக் காலணி விருதை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஆடும் கடைசி உலகக் கோப்பை போட்டியாக இது அமையும்.
