World Boxing Series India facing Russia in first fight
உலக குத்துச்சண்டை தொடர் (டபிள்யூஎஸ்பி) போட்டியில் இந்தியா தனது முதல் மோதலில் ரஷியாவை எதிர்கொள்கிறது.
உலக குத்துச்சண்டை தொடர் போட்டியின் ஆசிய பிரிவில் இந்தியா, ரஷியா, கஜகஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
உலக குத்துச்சண்டை தொடர் (டபிள்யூஎஸ்பி) போட்டியில் இந்திய அணிக்கு 'இன்டியன் டைகர்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அணிக்கான வீரர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றிருந்த 'மும்பை ஃபைட்டர்ஸ்' அணி, இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்திடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்காததை அடுத்து 2012-ல் போட்டியில் இருந்து விலகியது.
தற்போதைய இன்டியன் டைகர்ஸ் அணிக்கு இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் முழு உரிமையாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலக குத்துச்சண்டை தொடர் போட்டியில் இந்தியா - ரஷியா மோதும் ஆட்டம் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.
அதையடுத்து மார்ச் 24-ஆம் தேதி கஜகஸ்தானுடனும், ஏப்ரல் 20-ஆம் தேதி மீண்டும் ரஷியாவுடனும், 21-ஆம் தேதி சீனாவுடனும் சொந்த மண்ணில் இந்தியா மோதவுள்ளது.
அந்நிய மண்ணில் நடைபெறும் ஆட்டங்களில் பிப்ரவரி 10-ல் கஜகஸ்தானையும், மார்ச் 9-ல் சீனாவையும் இந்தியா சந்திக்கிறது.
